Skip to main content

Kolaru Pathigam - Tamil Mantra

Kolaru Pathigam -Tamil

Chant this mantra daily to overcome the obstacles influenced by Navagrahas. If you do not have time to chant this mantra completely, then chant the first paragraph at least.

கோளறு பதிகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை  வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டான் எந்தை மடவாள் தானோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு  கொலையானைகேழல்
கொடு நாகமொடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக
விடைபேறு செல்வன் அடைவார்
 ஒப்பிள   மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்போடு  குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி  வன்னி கொன்றை மலர் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரன்  நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளொடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீரு  செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய ப்ரம்மா புரத்து
தானுறு கோளும் நாளும்  அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல்  ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.




Comments

Popular posts from this blog

Mahalakshmi Moola Mantra - மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

மஹாலக்ஷ்மி மூல மந்திரம்  Chant this mantra for 108 times - Morning and Evening || Om sreem Shree'riyai namah || காலையும் மாலையும் 108 முறை சொல்லவும். ஓம்  ஸரீம் ஸ்ரீரியை நம 

Vallaba Maha Ganapathi Mantra - வல்லப மஹா கணபதி மந்திரம் English and Tamil

Chant this mantra daily morning for a good start of the day. Shree Vallabha Maha Ganapathi Mantra Om shreem hreem kleem kloum kam ganapatha'yae vara varadha sarva janam'mae vasamaa'naya swaahaa.  ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம்மே  வசமானய ஸ்வாஹா 

Navagraha Gayathri Mantras - English, Tamil, and Kannada

Navagraha Gayathri Mantras can be chanted any number of times as per your preference. Note : Mantras in Kannada language are provided with the help of Google Language Transliteration Tool. So if there are any errors, please let me know. 1. Sooriyan (Agni / Sun) ENGLISH Om aswath vajaa'ya vithmahae paasa hasthaa'ya dheemahi thanno sooryap pracho'dhayaath TAMIL ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யப் ப்ரசோதயாத்! KANNADA  ಓಂ ಅಶ್ವಥ್ ವಜಾಯ ವಿತ್ಹ್ಮಹೆ ಪಾಸ ಹಸ್ಥಾಯ ಧೀಮಹಿ ತನ್ನೋ ಮಂದ್ಹ್ ಪ್ರಚೋಧಯಾಥ್ 2. Chandiran (Moon) ENGLISH Om padmath vajaaya vithmahae haema roopaaya dheemahi thanno soma pracho'dhayaath TAMIL ஓம் பத்மத் வஜாய  வித்மஹே  ஹேம ரூபாய தீமஹி  தந்நோ சோம ப்ரசோதயாத்! KANNADA ಓಂ ಪದ್ಮಥ್ ವಜಾಯ ವಿತ್ಹ್ಮಹೆ ಹೇಮ ರೂಪಾಯ ಧೀಮಹಿ ತನ್ನೋ ಸೋಮ ಪ್ರಚೋಧಯಾಥ್ 3. Angaarahan / Sevvaai (Mars) ENGLISH Om veerath vajaaya vithmahae vigna hasthaaya dheemahi thanno bouma prachodhayaath TAMIL ஓம் வீரத் வஜாய வித்ம...